2025இல் இலங்கை ரூபாவிற்கு காத்திருக்கும் நெருக்கடி!
2025ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதால் இலங்கையில் டொலர் வெளிப்பாய்ச்சல் அதிகரிக்கும்.
இதனால், தற்போது அதிகரித்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி அப்போது சரிவடைய வாய்ப்புள்ளது.
தற்போது இலங்கையில் இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும் கடன்கள் கிடைக்கப்பெறுவதாலும் இலங்கை ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்து வருகின்றது.
எனினும், இறக்குமதிக்கான தடைகள் தளர்த்தப்படும் போதும் கடன்களை மீள செலுத்தும் போதும் இலங்கையில் டொலர் வெளிப்பாய்ச்சல் அதிகரிக்கும்.
இதேவேளை, இலங்கையின் கைத்தொழில் துறை முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒரு வளர்ச்சியை கடந்த காலங்களில் காட்டியுள்ளமை ஒரு சாதகமான பொருளாதார அம்சமாக கருதப்படுகின்றது.
இவை தொடர்பாக முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |