விபத்தில் இலங்கை அகதி ஒருவர் பரிதாபமாக பலி!
மதுரை - மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி நாகமங்கலம் நான்குவழிச் சாலையில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை அகதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் அகதிகள் முகாமை சேர்ந்த 21 வயதான டெலக்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வேலை நிமிர்தம் தனது நண்பருடன் மதுரைக்கு சென்று வரும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேலை முடிந்தது, மீளவும் திருவண்ணாமலை அகதிகள் முகாமிற்கு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மதுரை மாவட்டம், மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி நாகமங்கலம் நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் டெலக்சன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் காயத்துடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri