தலைமன்னார் கடற்பரப்பில் தவித்த இலங்கை அகதிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட 11 பேருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினால் கைது செய்யப்பட்டவர்கள் மணல் தீவுகளில் சிக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் உட்பட 11 பேர் மீட்பு
தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, மணல் தீவுகளில் நின்ற 2 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் அடங்கலாக 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட 11 பேரும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்ட நிலையில், நேற்று(06.09.2026) மன்னார் பதில் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவு
இதன்போது, மீட்கப்பட்ட 11 பேரில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தலா 2 இலட்சம் ரூபா ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்னார் பதில் நீதிவான், அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தில் சமூகமளிக்கும்போது கிராம சேவகர்களிடம் பதிவு செய்து, அதற்கான பதிவுகளை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன், , வழக்கை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு மன்னார் பதில் நீதிவான் ஒத்திவைத்தார்.
இரகசிய ஆவணங்களுடன் இறுதிக்கட்டத்தில் எயார்பஸ் விவகாரம்! மற்றுமொரு ராஜபக்சவை கைது செய்ய களமிறங்கிய அதிகாரிகள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22