மனைவியையும் மகனையும் பார்க்க முடியவில்லை என்ற கவலையில் இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை
தமிழகத்தில் அகதி முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 56 வயதான மெத்யூஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கூலித்தொழிலாளியான குறித்த நபர் கடந்த 2017ம் ஆண்டு குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இவர் மட்டும் 2018ம் ஆண்டு தமிழ்நாடு வந்து தனது வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்துள்ளார்.
இவரது மனைவியும், மகனும் இலங்கையில் உள்ளனர். அவர்களை பார்க்க இவரால் செல்ல முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்த இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் எருமப்பட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
