ஜூலை இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல்
ஜூலை இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்த திகதியை நடைமுறைப்படுத்துவதில் வேறு எந்த காரணமும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் இதன்போது விளக்கமளித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு
அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தின் பிரகாரம் இந்த தினங்களை எவரும் பரிசீலிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 76 ஆயிரம் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |