ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவு!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக முன்மொழியப்பட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ வேட்பாளர்
தேசிய மாநாட்டு பிரதிநிதிகளிடமிருந்து பெரும்பான்மையான வாக்குகளை பெற்றதால், ஜனாதிபதி போட்டிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை செனட்டர் ஜே.டி.வான்ஸ், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் 2016ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, 2020ல் ஜனாதிபதி ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.
மீண்டும் ஐனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை எதிர்த்து டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
