அடுத்த பத்து வருடங்களுக்கு ரணிலே ஜனாதிபதி : நவீன் திஸாநாயக்க
அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவே செயற்படுவார் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
கொத்மலை பகுதியில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
சஜித்தால் ஜனாதிபதியாக வர முடியவில்லை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சஜித் பிரேமதாஸவுக்கு அதிகமானோர் ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்களித்திருந்தனர். எனினும், அவரால் ஜனாதிபதியாக வர முடியவில்லை.
பிரதமர் பதவியைக் கூடப் பெறுவதற்கு அவர் தயக்கம் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றில் ஒருவர் மாத்திரமே இருந்தார். அவரால் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க முடிந்துள்ளது.
எனவே, அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவே செயற்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
