அவசரமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமாகவுள்ள இலங்கை அரசியல்வாதிகள்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலுக்கு மத்தியில் அங்கு பணிபுரியும் இலங்கையர்களின் நலன் குறித்து விசாரிப்பதற்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்ய முடிவு செய்துள்ளது .
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் ஆதரவைக் கோரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நேற்று (19) கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.
அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு! பொருட்களை வாங்குபவர்களுக்கு பரிசு அறிவிப்பு
பயணத்தின் நோக்கம்
பைசர் முஸ்தபா, அஜித் பி. பெரேரா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று தங்களது சொந்தச் செலவில் பயணம் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

துபாய், பஹ்ரைன், அபுதாபி, சவூதி, கத்தார், தோஹா, ஷார்ஜா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன் குறித்து விசாரிப்பதும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட தூதரகங்களுக்குத் தெரிவிப்பதுமே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று தயாசிரி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.