அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு! பொருட்களை வாங்குபவர்களுக்கு பரிசு அறிவிப்பு
புதிய இணைப்பு
பண்டிகை காலத்தில் 100 வகையான அத்தியாவசிய பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இலங்கை சதோச அரிசியை தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வாங்க முடியும் என்று கூறியுள்ளார்.
சதோசவினால் தள்ளுபடி செய்யப்பட்ட பல உணவுப்பொருட்களின் விலைகள் பின்வருமாறு,
வெள்ளை நாடு அரிசி - ரூ. 217
வெள்ளை கெக்குலு அரிசி - ரூ. 203
கோதுமை மாவு - ரூ. 254
நெத்திலி - ரூ. 1,050
பருப்பு- ரூ. 264
வெங்காயம் - ரூ. 150 - 160 க்கு
இதற்கிடையில், சதோசவில் ரூ. 2500-க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை வாங்குபவர்களுக்கு பரிசுகள்,கூப்பன் அட்டைகள் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சதோசவுக்கு வந்தால், காரிலோ அல்லது மிதிவண்டியிலோ வரலாம் எனவும், ரூ. 2500-க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை வாங்கி வெற்றியாளராகுமாறும் அவர் கூறியுள்ளார்.
முதலாம் இணைப்ப
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
உணவுப்பொருட்களின் விலைகள்
அதன்படி, லங்கா சதோச (Lanka Sathosa) வினால் வழங்கப்படும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப வெள்ளை அரிசி, ரொட்டி மாவு, பருப்பு வகைகள், பாக்கு மற்றும் வெற்றிலை போன்ற உணவுப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
YOU MAY LIKE THIS VIDEO