முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகன் மற்றும் மனைவி கைதாகலாம்! அநுரவின் பேச்சுக்கு நாமல் பதிலடி
யாருடைய வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும் மற்றும் யாரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேசிய மக்கள் சக்தியின் பெலவத்த கட்சி அலுவலகமே தீர்மானிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
களனி விகாரையில் நேற்று நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதியின் அச்சுறுத்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"மே தினக் கூட்டங்களில் தொழிலாளர் உரிமைகள் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, அரசியல் எதிராளிகளைச் சிறைக்கு அனுப்புவது குறித்தே ஜனாதிபதியும் ஆளும் தரப்பினரும் பேசினார்கள். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் போலியானவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளதால், அரசு தற்போது அடக்குமுறையைக் கையாண்டு வருகின்றது.
323 கொள்கலன்கள் விடுவிப்பு குறித்து முறைப்பாடளித்த டான் பிரசாத் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தின் ஊழல்
2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தில் திறைசேரியின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் உயிரிழந்துள்ளமை சந்தேகத்துக்குரியது. அரசின் ஊழல் மோசடிகளைத் நாம் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, “இந்த வருடத்தில் பல முக்கியமான அரசியல் புள்ளிகள் சிறைக்குச் செல்லவுள்ளதாகவும், மே மாதத்தில் மிக முக்கிய நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வெளிவரவுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம், அவருடைய மனைவி, அவரது மகன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இலங்கை அரசியல் பரப்பில் இந்தக் கருத்து பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஜனாதிபதியின் கருத்துக்கு பதில் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அச்சத்தில் திமுக - 41 வீதத்தில் ஆட்சியை பிடிக்கும் விஜய்..! தமிழக தலைவர்களின் திக்.. திக்.. நிமிடங்கள்
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு: கியூ.ஆர். எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam