திலினி பிரியமாலியின் ஆயிரம் கோடி ரூபாய் தொடர்பில் நீடிக்கும் மர்மம்
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் பாரிய மோசடியில் கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், பிக்குகள் என பலரும் சிக்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த குழுவினர் திலினி பிரியமாலிக்கு வழங்கிய பணம் ஆயிரம் கோடி ரூபாவை தாண்டியுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் சந்தேகம்
நீதிமன்ற உத்தரவிற்கமைய திகோ குழுமத்தின் கணக்குகளை சரிபார்த்தபோது, அந்தக் கணக்குகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்ததால், சந்தேக நபரான திலினி பிரியமாலி இவ்வளவு பெரிய தொகையை என்ன செய்தார் என்ற சந்தேகம் விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபரின் பண மோசடிகளில் தாம் சிக்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பல்வேறு தரப்பினர் ஊடாக செய்திகளை அனுப்பிய போதிலும் இதுவரை முறைப்பாடுகள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதுவரை கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாகும். திலினி பிரியமாலியிடம் பணத்தை முதலீடு செய்யவில்லை என சுமார் 15 பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
சந்தேகநபர் ஏமாற்றிய பணத்தை வழங்கியதாக கூறப்படும் இருவர் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நடிகையிடம் விசாரணை
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை வெளிவராத பிரபல நடிகை மற்றும் வர்த்தக நிறுவனங்களை வைத்திருக்கும் மூத்த நடிகை ஒருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த மோசடியுடன் தொடர்புடைய நிறுவனம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
திகோ குழுமம், என அழைக்கப்படும் நிறுவனம் மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்படவில்லை மற்றும் மத்திய வங்கியின் வங்கி சாரா நிதி நிறுவன ஒழுங்குமுறைத் திணைக்களம் நிறுவனம் பல்வேறு நபர்களிடமிருந்து வைப்புத்தொகையை ஏற்றுக்கொண்டது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கியின் வங்கி சாரா நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் திணைக்களம் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் மோசடியான நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஊடகங்களில் தகவல் வெளியாகும் முன்னர் மத்திய வங்கிக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
