விடுதலைப்புலிகளின் வழியில் எதிர்க்கட்சியினர்: பிரசன்ன குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பின்பற்றிய கொள்கையை தற்போதைய எதிர்க்கட்சியினர் பின்பற்றுகிறார்கள் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் போராட்டத்தை தூண்டிவிட்டு அதனூடாக இலாபமடைய முயற்சிக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
குறுகிய அரசியில் நோக்கத்துக்காக வன்முறைக்கு துணை சென்றதால் ஏற்படும் இறுதி விளைவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளி்ன் தொகுப்பு,
