இக்கட்டான நிலையில் ராஜபக்சர்கள்! பசிலுக்கும் வாய்ப்பில்லை - இறுதித் தெரிவு ரணில்
ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தமது குடும்பத்திற்குள் எவரும் இல்லை. வேட்பாளராக வெளியில் இருந்து ஒருவரை நியமிக்க விருப்பமும் இல்லை என்ற இக்கட்டான நிலைமைக்குள் ராஜபக்ச குடும்பம் தள்ளப்பட்டுள்ளதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ராஜபக்சர்களுக்கு வாய்ப்பில்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இதேவேளை, தற்போதைய நெருக்கடி நிலைமையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் மொட்டுக் கட்சி படுதோல்விக்கு தள்ளப்பட்டு விடும் என்றும் இதனால் இருக்குழு ஆசனங்களில் சிலவற்றையாவது தக்கவைத்துக் கொள்ளவே அவர்கள் பொதுத் தேர்தலை முதலில் நடத்த முயற்சிக்கின்றனர்.
பொதுஜன பெரமுனவிடம் வேட்பாளர் ஒருவர் இல்லாத காரணத்தினாலேயே அவசரமாக பொதுத் தேர்தலை கோருகின்றனர்.
சட்டத்தின்படி மகிந்த ராஜபக்சவுக்கு(Mahinda Rajapaksa) போட்டியிடவே முடியாது. கோட்டாபய ராஜபக்சவும்(Gotabaya Rajapaksa) போட்டியிடப் போவதில்லை. பசில்(Basil Rajapaksa) போட்டியிட்டால் மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) மிகவும் இளமையானவர்.
இதனால் போட்டியிடுவதற்கு ராஜபக்சக்களிடையே எவரும் இல்லை. ஆனாலும் ராஜபக்ச குடும்பத்தை விட்டு வெளியில் கொடுப்பதற்கும் விருப்பமில்லை.
வேட்பாளர் இல்லை
அப்படி அந்தக் கட்சிக்குள் வேறு ஒருவருக்கு வழங்க விரும்பியிருந்தால் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணிலிடம் ஜனாதிபதி பதவியை கொடுத்திருக்க மாட்டார்கள். தமக்கு முடியாது என்பதனையே இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் அவர்களிடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர் இல்லை, எவர் வேட்பாளராக வந்தாலும் மக்கள் அவரை தோற்கடிப்பர்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் பொதுத் தேர்தலில் மொட்டுக்டுக் கட்சி படு தோல்வியடையும். கட்சி கழுவிக் கொண்டு போய்விடும். இதனால் அவர்களுக்கு உள்ள ஒரே மாற்று வழியாக இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே(Ranil Wickremesinghe) ஒத்துழைப்பு வழங்க வேண்டிய நிலைமையே உள்ளது.
ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தாலும் மொட்டுக் கட்சி இல்லாது போய்விடும் .
இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் இவர்கள் நன்றாக சிக்கிக் கொள்வர். இதனால் இருக்கும் ஆசனங்களில் சிலவற்றையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே முதலில் பொதுத் தேர்தலை நடத்த முயற்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |