ரணிலை அவசரமாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட சஜித் (Video)
நாடாளுமன்ற விவாதத்திற்கு வரவுள்ள மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தை பிற்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09.05.2023) இணக்கம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (09.05.2023) காலை ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்கு ஜனாதிபதி சம்மதித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
"மசோதாவை ஒத்திவைத்து, அதன் மீது விரிவான விவாதத்திற்கு அனுமதிக்குமாறு நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்"
மத்திய வங்கியின் திருத்தச் சட்டமூலத்தை பிற்போடுவது தொடர்பில் இன்றைய வர்த்தகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.