ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு சென்றவர்கள் மீண்டும் ஆளும் கட்சிக்கு!
ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து, நாடாளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாகப் பிரிந்து அமர்ந்திருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் பியங்கர ஜயரத்ன ஆகியோர் மீண்டும் அரசாங்கத் தரப்புக்கு செல்லத் தயாராக உள்ளனர் என அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா செயற்படுகிறார். இந்தநிலையில் அரசாங்கத்தில் இணைவது குறித்து நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.
தற்போதைய அரசாங்கம்
ஆனால், அரசாங்கம் எப்படி நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது என்பதைப் பொறுத்தே நாங்கள் அதை முடிவு செய்வோம் என்று டபில்யூ.டி.ஜே செனவிரட்ன அரச ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் சில நல்ல பணிகளைச் செய்து வருவதே இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்ததால் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. மக்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
எங்களுக்கு தேர்தலுக்குச் செல்ல முடியாது
இருப்பினும், இந்த வரிசைகள் இப்போது தெரியவில்லை. வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு கையாளும் என்பதைப் பொறுத்தே தாங்கள் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக செனவிரத்ன கூறினார். இப்போது எங்களுக்கு தேர்தலுக்குச் செல்ல முடியாது என்று நான் உறுதியாக உணர்கிறேன்.
தேர்தலுக்கு அரசு நிதியளிக்க முடியாது. தற்போதைய சூழலில் வலுவான
ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் செனவிரட்ன
குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
