உறுப்பினர்களுக்கு மகிந்த கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்! செய்திகளின் தொகுப்பு(Video)
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவிற்கு அறிவித்துள்ளமை கட்சிக்குள் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் விண்ணப்பங்களை கோருவதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதால், பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அத்துடன், இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, அரசியலில் கிராம மக்களுடன் இணைந்து நடைமுறையில் செயற்பட்டுள்ளாரா என்பதுடன் கல்வியிலும் முதன்மை கவனம் செலுத்துமாறு மகிந்த அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
