காஸாவை முழுமையாக கைப்பற்றுவோம்: நெதன்யாகு அறிவிப்பு
காஸாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை நிறுத்த சர்வதேச நாடுகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு வெளிப்படுத்திய கருத்தானது போர் நிறுத்தத்துக்கான அழைப்பை புறக்கணிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இதற்கமைய காஸா பிராந்தியத்தை தமது முழுமையான கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும்வரை தாக்குதல் தொடரப்படும் என அவர் கூறியுள்ளார். 2023ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.
இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில், காஸாவில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸுடன் சண்டை
எனினும் நேற்று பாலத்தீனத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களை இஸ்ரேல் அனுமதித்திருந்தது.
ஆனால், ஹமாஸை முற்றிலும் ஒழிக்க முடியாமல் திண்டாடும் இஸ்ரேல், காஸா பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உள்ளதாக தற்போது கூறியுள்ளது. மேலும், "ஹமாஸுடன் சண்டை தீவிரமாக இருக்கிறது.
நாங்கள் முன்னேறி வருகிறோம். விரைவில் காஸா முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வருவோம். இதில் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்கள் வெற்றியை தடுக்க முடியாத வகையில் நாங்கள் செயல்படுவோம்" என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
