தேசபந்துவின் ஆட்சேபனைகளை நிராகரித்த விசாரணைக் குழு
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, பிரதிவாதி சார்பாக எழுப்பப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகளை நிராகரித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேனா மற்றும் நீதியரசர் டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணையத்தின் தலைவர் ஈ.டபிள்யூ.எம். லலித் ஏக்கநாயக்க தலைமையிலான இந்தக் குழு இன்று (19) நாடாளுமன்றத்தில் கூடியதுடன், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் முதல் தடவையாக விசாரணைக் குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இந்த நேரத்தில், 23 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அடிப்படை ஆட்சேபனை
மேலும் பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆர். வீரவிக்ரம மூன்று அடிப்படை ஆட்சேபனைகளையும் இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.
அந்த உண்மைகளை முன்வைத்த பின்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விசாரணைக் குழுவில் பங்கேற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் மற்றும் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜித பெரேரா ஆகியோர் இது தொடர்பாக தங்கள் ஆட்சேபனையை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த விசாரணைக் குழு, பிரதிவாதி சார்பாக எழுப்பப்பட்ட அனைத்து ஆரம்ப ஆட்சேபனைகளையும் நிராகரித்ததுடன் விசாரணையைத் தொடர முடிவு செய்தது.
இந்தக் குழு, மேலதிக விசாரணைக்காக 28 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு நாடாளுமன்றத்தின் குழு அறை எண் 8 இல் கூட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
