மக்களை சந்திக்க முடியாத நிலையில் அமைச்சர்கள்! இம்ரான் மகரூப்
மக்களை சந்திக்க முடியாத நிலையில் தற்போது பல அமைச்சர்களும் அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
மக்கள் சந்திப்பு
“தற்போது பல அமைச்சர்களும் அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் கொழும்பிலேயே தங்கி இருக்கிறார்கள்.
அவர்கள் அவர்களுடைய ஊருக்கும் தொகுதிக்கும் செல்ல முடியாமலும் மக்களை சந்திக்க முடியாமலும் இருக்கிறார்கள்.
மாகாண சபை தேர்தல்

இவர்கள் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார்கள். மாகாண சபை தேர்தல் என்றால் அதில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும் எனவும் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பேசினால் அதன் உறுப்பினர்களை குறைக்க வேண்டும் என்றும் அதில் மாற்றம் வரவேண்டும் எனவும் கூறுகிறார்கள்.
இவர்கள் இப்படி கூறுவதன் மூலம்
இவர்கள் அனைவரும் மக்களைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan