இலங்கை மக்களுக்கு பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை பொலிஸார் வெளியிடப்பட்டதாக கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு பதிவு தொடர்பான உண்மைகளைத் தெளிவுபடுத்தும் சிறப்பு அறிக்கை ஒன்றை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
“கவனமாக இருங்கள், நமது நாட்டில் நிலவும் இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் அறிந்து கொள்ளவும் நினைவில் கொள்ளவும் வேண்டிய சில முக்கிய விடயங்களில் நீங்கள் கூர்ந்து கவனம் செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு வழிகாட்டும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தச் செய்தி, இலங்கை பொலிஸாரால் வெளியிடப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்.
பொது எச்சரிக்கை
இலங்கை பொலிஸார் ஒரு பொது எச்சரிக்கையை வெளியிட்டால், அது பொலிஸ் ஊடகப் பிரிவால் செய்யப்படும், மேலும் அது உரிய தலைப்பின் கீழ் ஊடகங்களுக்கான அறிக்கையாக வெளியிடப்படும்.

அதிகாரப்பூர்வ செய்திகள், அவர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு மற்றும் யூடியூப் மூலம் தினசரி புதுப்பிக்கப்படும் எனவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.
பொலிஸாரின் சின்னம்
பொலிஸாரின் சின்னம் அல்லது பெயரைப் பயன்படுத்தி இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புவது ஒரு திட்டமிட்ட செயலா என்பதைக் கண்டறிய தேவையான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகைய பதிவுகள் குறித்து பொதுமக்கள் புரிதலுடனும் விவேகத்துடனும் செயல்படுமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.