அரிசி முதல் மீன் வரை விலை உயரும் அபாயம்: மரிக்கார் எம்.பி. பகிரங்க எச்சரிக்கை
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், சந்தையில் ஏனைய அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் கணிசமாக உயரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(22.3.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, எரிபொருள் விலை அதிகரிப்பால் இடைத்தரகர்களின் போக்குவரத்துச் செலவுகள் உயர்வடையும்.இதன் நேரடி விளைவாகச் சந்தையில் அரிசியின் விலை பெருமளவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
விலை உயரும் அபாயம்
அதேபோன்று, மீன்பிடிப் படகுகளுக்கான எரிபொருள் செலவு அதிகரித்துள்ளதால், நுகர்வோர் மீன்களை அதிக விலைக்குக் கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.

தற்போதைய அரசின் மீது மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் தற்போது சிதைந்துவிட்டன.
அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு முறையான பொறிமுறையொன்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam