மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இலங்கையின் எரிபொருள் விநியோகத்திலும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன இதனை எதிர்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (22) வேண்டுகோள் விடுத்தார்.
நிலவும் விநியோகக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, மின்சாரம் மற்றும் எரிபொருளை மிகவும் பொறுப்புடனும், அவசியமான தேவைகளுக்காகவும் மட்டுமே பயன்படுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்க இராணுவத்திற்கு உதவும் நிதி நிறுவனங்கள் ஈரானின் நியாயமான இலக்குகள்! வெளியான இறுதி எச்சரிக்கை
அவசர கோரிக்கை
எரிசக்தி நுகர்வை குறைந்தபட்ச அளவில் வைத்திருப்பது நாட்டின் தற்போதைய நிலையைச் சமாளிக்க உதவும் என அவர் குறிப்பிட்டார்.
எரிபொருளைப் பதுக்குபவர்கள் மற்றும் சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அத்தகைய செயல்களை நிறுத்த வேண்டும்.

இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசாங்கம் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என அமைச்சர் எச்சரித்தார்.
கள்ளச்சந்தையில் எரிபொருள் வாங்குவதைத் தவிர்க்குமாறும், இவ்வாறான சட்டவிரோதச் செயல்கள் குறித்துத் தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
நேற்று இரவு அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, இலங்கையில் எரிபொருள் விலைகள் கடந்த 2022 பொருளாதார நெருக்கடியின் போது இருந்த நிலையை மீண்டும் எட்டியுள்ளன.
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan