இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸிற்கு அவசர அறுவை சிகிச்சை
இலங்கை வீரர் குசல் மெண்டிஸ், உடல்நலக்குறைவு காரணமாக டுபாயில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வீரர் குசல் மெண்டிஸுக்கு சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாற்று வீரர் குறித்த அறிவிப்பு
தற்போது இடம்பெற்று வரும் ILT20 போட்டியில் பங்கேற்ற குசல் மெண்டிஸுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்பட்டதையடுத்து, தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக, ILT20 சீசனின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் எனவும் கூறப்படுகின்றது.
இலங்கை கிரிகெட் அணி சரியான நேரத்தில் மாற்று வீரர் குறித்து அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டி ஜனவரி 4 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan