இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை
இலங்கை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்குபற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முக்கோணத் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனையாக களமிறங்கும் வீனஸ் வீரப்புலி இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது விசேட அம்சமாகும்.
வீனஸின் தந்தை அஜந்த வீரப்புலி, இலங்கையின் முன்னாள் முதல் தரக் கிரிக்கெட் வீரர் ஆவார்.
இலங்கை வீராங்கனை
அவர் கோல்ட்ஸ், NCC, லங்கன் மற்றும் தமிழ் யூனியன் ஆகிய அணிகளுக்காக 36 போட்டிகளில் விளையாடி 8 அரைச்சதங்களுடன் 1,243 ஓட்டங்களை குவித்துள்ளார்.

கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான அஜந்த, தனது மனைவி கிறிஸ்டீனுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்.
பிரித்தானியாவில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை நடத்தி வரும் அவர், தனது மகளையும் ஒரு சிறந்த வீராங்கனையாக உருவாக்கியுள்ளார்.
வீனஸ் வீரப்புலி இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகக்குறுகிய காலத்தில் முத்திரை பதித்துள்ளார்.
இங்கிலாந்தின் பிரபல வீராங்கனை ஷார்லட் எட்வர்ட்ஸ் பெயரில் வழங்கப்படும் 16 வயதுக்குட்பட்ட சிறந்த வீராங்கனை விருதை வீனஸ் வென்றுள்ளார்.
இதன் பின்னரே அவருக்கு இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கை அணியின் தலைவி
தந்தை அஜந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர், மகள் வீனஸ் வலதுகை பந்து வீச்சாளராகும். இருவருடைய கைகளும் திசைகளும் வேறாக இருந்தாலும், துடுப்பாட்ட வீரர்களுக்குப் பந்து சுழன்று வரும் திசை ஒன்றாகவே அமையும்.

இது வீனஸுக்கு தனது தந்தையிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளப் பெரும் உதவியாக உள்ளது.
வீனஸ் தனது முன்மாதிரியாக கருதுவது இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து என குறிப்பிட்டுள்ளார்.
வீனஸின் சகோதரரும் இங்கிலாந்தில் ஒரு இளம் கிரிக்கெட் வீரராக வளர்ந்து வருகின்றார்.
தற்போது இங்கிலாந்து அணிக்காக இலங்கை மண்ணில் விளையாடினாலும், வீனஸ் விடுமுறைக்காக இலங்கை வரும் போதெல்லாம் கொழும்பு மைதானங்களில் பயிற்சி பெறுவதையும், இலங்கை சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்! Manithan