இந்திய கடற்றொழிலாளர்களை தாக்கிய இலங்கையின் கடற்கொள்ளையர்கள்
இலங்கை கடற்படையினர் தம்மை தாக்குவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில், தற்போது, இலங்கையின் கடற்கொள்ளையர்களும் தம்மீது தாக்குதல்களை நடத்துவதாக இந்திய கடற்றொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 15ஆம் திகதியன்று இடம்பெற்றதாக தமிழக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடற்கொள்ளையர்கள்
செந்தில், சாமுவேல், ராமகிருஸ்ணன் மற்றும் ஜெகன் ஆகிய நான்கு கடற்றொழிலாளர்களும், 2025 ஏப்ரல் 15 ஆம் திகதியன்று, மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள், கோடியக்கரை கடலில் மீன்பிடித்துவிட்டு, திரும்பும்போது, இரவு சுமார் 10:30 மணியளவில், மற்றொரு படகு அவர்களின் படகை மறித்துள்ளது.
அத்துடன் அந்த படகில் இருந்து மூன்று கடற்கொள்ளையர்கள், தமிழக கடற்றொழிலாளர்களின் படகில் ஏறி கத்திகள், கம்புகள்; போன்ற ஆயுதங்களால் அவர்களைத் தாக்கியுள்ளனர்.
தாக்குதல்
இதன்போது, தமிழக கடற்றொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகினர். அத்துடன் குறித்த கடற்றொழிலாளர்களின் பெறுமதிமிக்க பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் அன்றைய தினம், இலங்கை கடற்கொள்ளையர்கள், மேலும் சில இந்திய கடற்றொழிலாளர்களையும் தாக்கியதாக முறையிடப்பட்டுள்ளது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
