உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்! 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

Sri Lanka Passport
By Shadhu Shanker Jul 22, 2026 12:44 PM GMT
Report

இலங்கை கடவுச்சீட்டின் (Passport) தரவரிசை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான Henley Passport Index தரவரிசைப்படி, உலக நாடுகளில் இலங்கை 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள், விசா இல்லாமல் அல்லது சென்ற இடத்திலேயே விசா (Visa on Arrival) பெற்றுக்கொண்டு 39 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

715 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு! 105 நிறுவனங்களை சிக்கவைத்த பெரும் நிதி மோசடி - சிக்கலில் ரணில்

715 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு! 105 நிறுவனங்களை சிக்கவைத்த பெரும் நிதி மோசடி - சிக்கலில் ரணில்

இலங்கை கடவுச்சீட்டு

Henley Passport Index என்பது உலக நாடுகளின் கடவுச்சீட்டு வலிமையை அளவிடும் முக்கியமான தரவரிசைகளில் ஒன்றாகும்.

இந்த தரவரிசை, முன்கூட்டியே விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் 199 கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது. இந்த தரவரிசை, சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்! 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு | Sri Lankan Passport Hits Highest Ranking In Decade

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை பெற்றுள்ள சிறந்த தரவரிசை இதுவாகும்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இலங்கை 96ஆவது இடத்திலும், 2023 ஆம் ஆண்டு 100ஆவது இடத்திலும், 2022 ஆம் ஆண்டு 102ஆவது இடத்திலும், 2021 ஆம் ஆண்டு 107ஆவது இடத்திலும் இருந்தது. 2026 ஆம் ஆண்டின் 94ஆவது இடம், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை பெற்றுள்ள சிறந்த நிலையாகும்.

கனடாவில் பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை வம்சாவளி மருத்துவர்

கனடாவில் பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை வம்சாவளி மருத்துவர்

மிக உயர்ந்த தரவரிசை

2017 ஆம் ஆண்டு இலங்கை 95ஆவது இடத்தில் இருந்தது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு 99ஆவது இடத்துக்கு சரிந்த இலங்கை, 2019 ஆம் ஆண்டு 96ஆவது இடத்துக்கு முன்னேறியது.

2020 ஆம் ஆண்டு 97ஆவது இடத்திலும், 2021 ஆம் ஆண்டு 107ஆவது இடத்திலும் இருந்தது. 2021 ஆம் ஆண்டின் 107ஆவது இடத்திலிருந்து தற்போது 2026 ஆம் ஆண்டு 94ஆவது இடத்துக்கு இலங்கை முன்னேறியுள்ளது.

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்! 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு | Sri Lankan Passport Hits Highest Ranking In Decade

அதாவது கடந்த 5 ஆண்டுகளில் இலங்கை கடவுச்சீட்டின் தரம் 13 இடங்கள் உயர்ந்துள்ளது.

இலங்கையின் இந்த முன்னேற்றத்துக்கு, அதிகரித்து வரும் சர்வதேச தொடர்புகள், சுற்றுலா வளர்ச்சி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் பல நாடுகளுடனான நல்லுறவுகள் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.

இலங்கையின் இந்த முன்னேற்றம், நாட்டின் சர்வதேச தொடர்புகள் மற்றும் உலக நாடுகளுடனான நம்பிக்கை அதிகரித்து வருவதற்கான ஒரு சாதகமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி பதவி விலகக் கோரி போராட்டம்! கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி விடுதலை

பிரதமர் மோடி பதவி விலகக் கோரி போராட்டம்! கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி விடுதலை

4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US