விமான நிலையத்தில் சிக்கிய இலங்கைப் பயணி: பல கோடி பெறுமதியான பொருள் பறிமுதல்
சுமார் 11 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான "குஷ்" மற்றும் "ஹஷீஷ்" போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கைப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கை நடவடிக்கை நேற்று(06.03.2026) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகர சபை ஊழியர் கைது
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கொழும்பு - 12 பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மாநகர சபை ஊழியர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தனது பயணப் பொதியில் இரகசியமாக 6 கிலோ 590 கிராம் "குஷ்" போதைப்பொருளையும், 4 கிலோ 910 கிராம் "ஹஷீஷ்" போதைப்பொருளையும் மறைத்து வைத்து கடத்தி வர முற்பட்டுள்ளார்.

விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போதே, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 23 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri