கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
25,550,000 ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகுதியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய் ஏர் ஆசியா விமான சேவை
அவர் இன்று அதிகாலை 1.25 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து, தாய் ஏர் ஆசியா விமான சேவைக்கு சொந்தமான FD-140 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேக நபரின் பயணப்பொதிக்குள் இருந்த காய்ந்த பழங்கள் அடங்கிய பக்கெட்டுகளில், பழங்களை அகற்றிவிட்டு 2 கிலோகிராம் 505 கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த நிலையில், சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய புகைப்படக் கலைஞர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam