லண்டனில் தீவிரமாக தேடப்படும் தமிழர்! பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
லண்டன் இல்ஃபோர்ட் பகுதியில் தமிழரொருவர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு லண்டனில் காப்பகம் ஒன்றிலிருந்து மார்ச் 20 ஆம் திகதி அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் 35 வயதான பாலசங்கர் நாராயணன் என்ற சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச்சென்ற போது நீல நிற டிராக்சூட்டில் இருந்ததாகவும், இவர் மிகவும் ஆபத்தானவர் என்பதனால் அவரை யாரும் நெருங்க வேண்டாம் எனவும் மாநகர பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரை அடையாளம் காண நேர்ந்தால், அவரை நெருங்காமல் 999 இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளனர்.

பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
குறிப்பாக நியூஹாம், கிரீன்ஃபோர்ட், ஹேமர்ஸ்மித், ஹைகேட் மற்றும் இல்ஃபோர்ட் பகுதிகளில் அவருக்கு அடைக்கலம் வழங்கப்படலாம் எனவும், நாட்டில் அவர் எங்கு வேண்டுமானாலும் அவர் மறைவாக இருக்கலாம் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், அவரது இருப்பிடத்தை கண்டறிய பொலிஸார் தீவிர நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாலசங்கர் நாராயணன் தற்போது ரயில் சேவையை பயன்படுத்தி தப்பிக்க முயற்சி மேற்கொள்ளலாம் எனவும், ஊழியர்கள் மற்றும் பயணிகள் அவரை அடையாளம் காண நேரிட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam