145 ஆண்டுகால வரலாற்றை புரட்டிப் போட்ட அநுரவின் தீர்மானம்

Government Of Sri Lanka Department of Prisons Sri Lanka Galagoda Aththe Gnanasara Thero NPP Government
By Sajithra Oct 13, 2026 04:51 AM GMT
Report

இலங்கையில் பௌத்த பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை நடைமுறைகள் மற்றும் சட்ட விதிகள் குறித்து தற்போதைய அரசாங்கம் ஒரு வரலாற்று மாற்றத்தை உருவாக்க முனைந்துள்ளது. 

சிறைத்தண்டனை பெறுகின்ற பௌத்த பிக்குகளின் காவி உடைகள் அகற்றப்பட்டு, சிறைச் சீருடைகளுக்கு மாற்றப்படும் 145 ஆண்டுகால பழமையான சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் கைது மற்றும் அவரது காவி ஆடை அகற்றப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. 

ஞானசாரர் விவகாரம்..  

இந்நிலையில், இவ்விகாரத்திற்கு தீர்வு காணும் வகையில், மகா சங்கத்தினரின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்கும் வகையிலும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நோக்கி அரசாங்கம் நகர்கின்றது. 

145 ஆண்டுகால வரலாற்றை புரட்டிப் போட்ட அநுரவின் தீர்மானம் | Sri Lankan Monks Prison Rule

ஞானசார தேரரின் காவி உடை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியமையே பிக்குகளுக்கான சீருடை தொடர்பிலான சட்டம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வித்திட்டது. 

இருப்பினும், இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னரும் இவ்வாறான பிக்குகள் கைது செய்யப்பட்டு காவி உடை அகற்றப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் அரசாங்கம் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்திருந்ததா? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. 

அது மாத்திரமல்லாமல், தற்போதைய அரசாங்கம் பிக்குகளுக்கு சாதகமான ஒரு தீர்மானத்தை தான் எடுக்க முயல்கின்றதா என்ற சந்தேகமும் வலுக்கின்றது. 

உண்மையில் இது குறித்து ஆராய்கையில், இலங்கை வரலாற்றில் சிறைத் தண்டனை அல்லது விளக்கமறியலின் போது பௌத்த பிக்குகள் சிறை உடைகளுக்கு மாற்றப்பட்டது இதுவே முதல் முறையல்ல.

சிறைத் தண்டனை அல்லது விளக்கமறியலின் போது பௌத்த பிக்குகளின் காவி உடை அகற்றப்பட்டு சிறை உடைகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்கள் பலமுறை பெருமளவில் சர்ச்சைகளையும், மத ரீதியான மற்றும் அரசியல் ரீதியான விவாதங்களையும் தோற்றுவித்துள்ளன.  

தமிழக முதல்வர் விஜயை கடுமையாக சாடிய ஜனாதிபதி அநுர

தமிழக முதல்வர் விஜயை கடுமையாக சாடிய ஜனாதிபதி அநுர

ஜே.வி.பி கிளர்ச்சி

குறிப்பாக, 2017ஆம் ஆண்டில் அக்மீமன தயாரத்ன தேரர், கல்கிஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது, அவரும் சாதாரண நடைமுறைகளுக்கே உட்படுத்தப்பட்டார்.

145 ஆண்டுகால வரலாற்றை புரட்டிப் போட்ட அநுரவின் தீர்மானம் | Sri Lankan Monks Prison Rule

1950 - 1980களில் இலங்கையின் ஆரம்பகால இடதுசாரி இயக்கங்கள் மற்றும் ஜே.வி.பி கிளர்ச்சிகளின் போது கைது செய்யப்பட்ட அல்லது சிறையிலடைக்கப்பட்ட சில பிக்குகள், அப்போதைய சிறைச்சாலை விதிமுறைகளின்படி சாதாரண கைதிகளைப் போல சிறை உடைகளை அணிய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அப்போது, பிக்குகள் குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும், அவர்களைச் சாதாரண கைதிகளைப் போல நடத்துவது பௌத்த விநய விதிகளுக்கு முரணானது என மகா சங்கத்தினரும் பௌத்த அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தன.

அதேநேரம், ஜே.ஆர். ஜெயவர்தன ஆட்சி காலத்தில் சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய பிரபல பௌத்த துறவியான மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் சில பிக்குகள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட போது, அவர்களை நடத்திய விதம் மற்றும் சிறை நடைமுறைகள் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

பௌத்த நாட்டில் பிக்குகளின் மத அடையாளமான சீவரத்தை மதிப்பது தொடர்பான விவாதங்கள் தீவிரமடைய இச்சம்பவம் முக்கிய காரணியாக அமைந்தது.

சாமர சம்பத் எம்பி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்..

சாமர சம்பத் எம்பி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்..

முந்தைய அரசாங்கங்களின் யுத்தி

இருப்பினும், கடந்த காலங்களில் பிக்குகளின் சீவரம் அகற்றப்பட்ட போது பெருமளவிலான சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் எழுந்தபோதிலும், அரசாங்கங்கள் சிறைச்சாலைச் சட்டத்திலோ அல்லது நடைமுறைகளிலோ அதிகாரப்பூர்வ மாற்றங்களை மேற்கொள்ளவில்லை.

145 ஆண்டுகால வரலாற்றை புரட்டிப் போட்ட அநுரவின் தீர்மானம் | Sri Lankan Monks Prison Rule

1877இல் பிரித்தானியர் காலத்தில் கொண்டுவரப்பட்ட சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின்படி, கடுங்காவல் தண்டனை (Rigorous Imprisonment) பெறும் அனைத்துக் கைதிகளும் சிறைச் சீருடையையே அணிய வேண்டும்.

பிக்குகளுக்கு விதிவிலக்கு அளிப்பது "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற அரசியலமைப்பு தத்துவத்தை மீறுவதாகும் எனக் கூறி முந்தைய அரசாங்கங்கள் சட்டத் திருத்தங்களைத் தவிர்த்து வந்தன.

அத்துடன், பிக்குகளுக்கு மட்டும் சிறை உடையில் விதிவிலக்கு அளித்தால், பிற மதப் போதகர்கள் (குருமார்கள், மௌலவிகள்) மற்றும் அரசியல் கைதிகளும் தமக்கான சிறப்பு ஆடைகள் மற்றும் உரிமைகளைக் கோருவார்கள் என்ற சட்டச் சிக்கல் நிலவியது.

அதேநேரம், சட்டத்தை நேரடியாக மாற்றாமல், நிலமையைச் சமாளிக்க முந்தைய அரசாங்கங்கள் சில நடைமுறை வழிகளைப் பயன்படுத்தியுள்ளன. 

சிறையில் அடைக்கப்படும் பிக்குகள் சாதாரண கைதிகளுடன் வைக்கப்பட்டு காவி உடை அகற்றப்படுவதைத் தவிர்க்க, அவர்கள் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே "உடல்நலக் குறைவு" எனக் கூறி சிறை மருத்துவமனைக்கோ அல்லது தேசிய மருத்துவமனைக்கோ மாற்றப்பட்டனர்.

மருத்துவமனைகளில் அவர்கள் தமது சொந்தக் காவி உடையை அணிய அனுமதிக்கப்பட்டனர்.

அர்ச்சுனா எம்பியின் பதவி விவகாரம் குறித்து நீதிமன்றின் தீர்மானம்

அர்ச்சுனா எம்பியின் பதவி விவகாரம் குறித்து நீதிமன்றின் தீர்மானம்

ஜனாதிபதிகளின் நிறைவேற்று அதிகாரம் 

பிக்குகள் சிறைச்சீருடையில் நீண்ட காலம் இருப்பதைத் தவிர்க்கவும், மகா சங்கத்தின் அழுத்தத்தைக் குறைக்கவும், 2019இல் மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரருக்கு வழங்கியது போல மற்றும் கடந்த கால ஜனாதிபதிகள் தமது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுக்குக் குறுகிய காலத்தில் பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தனர்.

145 ஆண்டுகால வரலாற்றை புரட்டிப் போட்ட அநுரவின் தீர்மானம் | Sri Lankan Monks Prison Rule

சந்தேகநபராக விளக்கமறியலில் வைக்கப்படும் பிக்குகள் தமது காவி உடையை அணிய சட்டத்தில் அனுமதி இருந்தது. ஆனால், நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட பிக்குகளுக்கு இந்த அனுமதி வழங்கப்படவில்லை என்ற போதிலும் முந்தைய அரசாங்கங்கள் அவற்றை மீறும் வகையிலேயே செயற்பட்டுள்ளன எனலாம். 

இவ்வாறான பின்னணியில், கடந்த 145 ஆண்டுகளுக்கும் மேலாக (1877 முதல்) பிக்குகளின் காவி உடை விவகாரத்தில் சட்ட ரீதியான எந்த மாற்றமும் செய்யப்படாமல், அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவுகளாகவே முதன்மையாக இருந்துள்ளன. 

ஆனால், தற்போது கொண்டுவரப்படவுள்ள சட்டத் திருத்தமே இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, பிக்குகளின் மத கௌரவத்தையும் சட்ட நடைமுறைகளையும் இணைத்துச் சிறைச்சாலை கட்டளைச் சட்ட விதிகளில் அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் செய்யவுள்ள முதல் சட்ட ரீதியான மாற்றமாகும்.

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கோட்பாட்டிற்கும், பௌத்த மத மரபுகள் மற்றும் விநய விதிகளுக்கும் இடையே கடந்த 145 ஆண்டுகளாக நிலவி வந்த சட்ட முரண்பாட்டிற்கு அநுர அரசு முதன்முறையாகச் சட்டப் பூர்வமான ஒரு முடிவைக் கொண்டு வந்துள்ளது.

பிக்குகளின் மதக் கௌரவத்தைப் பாதுகாக்கும் அதேவேளையில், நீதிமன்றத் தண்டனையை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த புதிய திருத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை வரலாற்று மாற்றமாகவே அமைந்துள்ளது. 

மகிந்த ராஜபக்சவின் உடல்நிலைத் தொடர்பில் போலித் தகவல்! வைத்தியசாலையில் ஏன் அனுமதிக்கப்பட்டார்..

மகிந்த ராஜபக்சவின் உடல்நிலைத் தொடர்பில் போலித் தகவல்! வைத்தியசாலையில் ஏன் அனுமதிக்கப்பட்டார்..

you may like this..



2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US