குரங்குகளுடன் மேலும் சில விலங்குகளை ஏற்றுமதி செய்ய திட்டம்!

Mahinda Amaraweera Government Of Sri Lanka United States of America China Sri Lanka Government
By Chandramathi Apr 20, 2023 11:24 PM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

குரங்குகளுடன் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விலங்குகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கேள்வி ஏற்பட்டால் அவற்றை ஏற்றுமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தென்னந்தோப்புக்கு மிகப்பெரிய சேதம்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிராக உள்ள தென்னந்தோப்புக்கு மிகப்பெரிய சேதத்தை டோக் மக்காக்கள், குரங்குகள் மற்றும் இராட்சத அணில்கள் ஏற்படுத்துகின்றன.

குரங்குகளுடன் மேலும் சில விலங்குகளை ஏற்றுமதி செய்ய திட்டம்! | Sri Lankan Monkeys Export To China  

எனவே காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் முள்ளம்பன்றிகள், டோக் மக்காக்கள், குரங்குகள் மற்றும் இராட்சத அணில் போன்ற சில விலங்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விலங்குகளினால் ஏனைய பயிர்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குரங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியுமா என்பதை ஆராய்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை அமைச்சரினால் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சரவையில் இறுதி முடிவு

குரங்குகளுடன் மேலும் சில விலங்குகளை ஏற்றுமதி செய்ய திட்டம்! | Sri Lankan Monkeys Export To China

இதேவேளை சீனாவுக்கு மாத்திரமன்றி அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் குரங்குகள் ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்படுகின்றது.

இந்த குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் சீனாவில் உள்ள 1,000 உயிரியல் பூங்காக்களுக்கு இந்த விலங்கு வழங்கப்படுவதுடன் அவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்த விலங்குகளை சீனாவுக்கு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் அமைச்சரவையில் இறுதி முடிவு அல்லது முன்மொழிவு எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.”என தெரிவித்துள்ளார்.

விவசாய ஆராய்ச்சி அறிக்கை

குரங்குகளுடன் மேலும் சில விலங்குகளை ஏற்றுமதி செய்ய திட்டம்! | Sri Lankan Monkeys Export To China

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

2022 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் 93 மில்லியன் தேங்காய்கள் குரங்குகள், மக்காக்கள் மற்றும் இராட்சத அணில்களால் அழிக்கப்பட்டுள்ளன.

மேலும் 2022 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 180-200 மில்லியன் தேங்காய்களாக அதிகரித்ததாக அறிக்கைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.             

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US