உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்
கோரப்பட்ட நிதி ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் கிடைத்தால், ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவேண்டுமானால், ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
பிரதமரை சந்திப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை
ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை இரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு பின்னர் நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சராக செயற்படும் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திப்பதற்கும்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
