ஈழத் தமிழ் உறவுகளுக்கும் இடையில் மோதலை தோற்றுவிக்கும் ரோ அமைப்பு
ஈழத் தமிழ் உறவுகளுக்கும் இடையில் மோதலை தோற்றுவிப்பதில் இலங்கை அரசும் இந்திய புலனாய்வு பிரிவின் ரோ அமைப்பும் இணைந்து பல சதித் திட்டங்களை திரை மறைவில் செயல்படுத்துகின்றனர் என முன்னாள் அரசியல் கைதியும் சமூக செயற்பாட்டாளருமான வீரசிங்கம் சுலக்சன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் அபிலாசை
தமிழ் தேசிய அரசியல் அரங்கில் தற்போது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சர்வதேச உலகுக்கு உண்மையாக கொண்டு செல்லும் சக்தியாக ஊடகத்தினர் செயற்படுகின்றார்கள்.
ஈழ யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாகின்றது. ஆனால் சிறைச்சாலைகளில் இருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சர்வதேசமோ ஐ.நா மனித உரிமை ஆணையகமோ காத்திரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் செயற்பாடுகளையே இலங்கை அரசும் அதனோடு சேர்ந்து இயங்கும் ஒரு சில தமிழ் அரசியல் தலைமைகளும் முன்னெடுத்து செயல்படுத்துகின்றனர்.
காரணம் ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் தாய் தமிழக உறவுகளுக்கும் ஈழத் தமிழ் உறவுகளுக்கும் இடையில் மோதலை தோற்றுவிப்பதில் இலங்கை அரசும் இந்திய புலனாய்வு பிரிவின் ரோ அமைப்பும் இணைந்து பல சதித் திட்டங்களை திரை மறைவில் செயல்படுத்துகின்றனர்.
கடற்றொழிலாளர் விவகாரம்
அதன் ஒரு அங்கமே இலங்கை இந்திய கடற்றொழிலாளர் விவகாரம். இறுதி யுத்த காலப்பகுதியில் ஈழத் தமிழ் உறவுகளுக்காக தங்களின் இன்னுயிர்களை அர்ப்பணித்த எமது தமிழக உறவுகளுக்கும் ஈழத் தமிழருக்கும் இடையில் மன மன கசப்பினை விதைக்கும் நோக்கில் சுலபமாக தீர்க்கப்பட வேண்டிய இந்திய இழுவைமடி பிரச்சினை ஆனது திட்டமிட்டு தமிழர் ஒன்றுபடுதலை தடுக்கும் நோக்கில் சிங்கள பேரினவாத அரசும் இந்திய புலனாய்வு பிரிவு ரோவும் இணைந்து செயல்படுகின்றன.
இது தமிழர்கள் விழிப்படைய வேண்டிய கட்டாய தருணம். எப்போதும் தமிழக அரசியல் அரங்கில் ஈழத் தமிழர் விவகாரம் கட்டாய பேசு பொருளாக உள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |