வட மாகாணத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் விஜயம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் றோகினி மாரசிங்க தலைமையிலான குழுவினர் இன்று(16.02.2023) வடக்கு மாகாணத்துக்கான களவிஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளிலும் வடக்கு மாகாணத்தில் குறித்த குழுவினர் களவிஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கள நிலவரங்களை ஆராய்தல்
நேற்று(15.02.2023) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும், குறித்த குழுவினர் இவ்வாறு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடனும் பல சந்திப்புக்களை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
அந்த சந்திப்புகளின் பிரதான நோக்கமானது வடக்கு மாகாணத்தின் மனித உரிமைகள்
தொடர்பான தற்போதைய கள நிலவரங்களை ஆராய்வதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.





