வெளிநாடொன்றில் சித்திரவதைக்குள்ளாகும் இலங்கை பெண்கள்
இலங்கையில் இருந்து சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்ற 4 பெண்கள் ரியாத்தில் உள்ள வீடொன்றில் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பல மாதங்களாக துன்புறுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் ஒருவரால் மறைத்து வைத்திருந்த தொலைபேசி ஊடாக தாம் எதிர்கொள்ளும் அனுபவங்கள் குறித்த தகவல்களை இந்நாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
துன்புறுத்தல்
கொழும்பு மற்றும் குருநாகல் பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களில் இருந்து இந்த பெண்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரியான உணவு இன்மை, ஊதிய இழப்பு, பல்வேறு தொல்லைகளால் வேலை இழப்பு எனப் பல காரணங்களால் இப்பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டு சௌதி அரேபியாவில் - ரியாத்தில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பெருமளவான வீட்டுப் பணியாளர்கள் இந்த இடத்தில் தங்கியிருப்பதாகவும் தங்களை அங்கிருந்து மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடு சென்றதாகவும், தனியார் தொழில் நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து தகவல் தெரிவித்தும் பலனில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மற்றும் அவர்களை காப்பாற்ற இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டும் என்பதே இந்த இலங்கை வீட்டுப் பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.