அரச பணியாளர்களின் கொடுப்பனவுகளுக்கு சிக்கல்: உண்மையை உடைத்த சஜித் - செய்திகளின் தொகுப்பு
தொடர்ந்தும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் தேர்தலில் பங்கேற்ற அரச பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் சில அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற துணை நிறுவனங்களினது ஊழியர்களுக்கு உரிய விடுமுறை கூட கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (18.07.2023) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரச பணியாளர்களின் சேவைக்காலம் முழுவதும் பாதிப்பதாகவும், இந்த நிலைமைக்குத் தீர்வு காணப்பட்டதாகக் கூறப்படுகின்றபோதிலும் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
