கடன் வழங்குனர்களுக்கு பணத்தை செலுத்த தவறிய இலங்கை அரசு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நாடு வங்குரோத்தடைந்துவிட்டதாக அறிவித்த 2022 ஏப்ரல் முதல் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் வழங்குனர்களுக்கு இலங்கை செலுத்தத் தவறிவிட்டதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் (யுஆர்எஃப்) தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ்(X) தளத்தில் இந்த விடயம் தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் தரவுகள் வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதைக் காட்டுகின்றன எனவும் கூறியுள்ளார்.
While @CBSL data shows #SL foreign reaerves reaching $ 5 billion, it is imperative to understand that from April 2022, the sum of defaulted debt is approximately $ 6 billion. The sum of loans obtained since the default from WB, ADB and IMF is $ 3 billion.…
— Patali Champika Ranawaka (@pcranawaka) April 8, 2024
மத்திய வங்கியின் தரவுகள்
மேலும், “இதுவே யதார்த்தம். இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றன.
எனினும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், செலுத்தாத கடனின் தொகை 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இந்தநிலையில் நாடு திவாலான பின்னர், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்படுள்ளது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |