இலங்கை அரசு வீணான வதந்திகளை பரப்புகின்றது: க.இன்பராசா

Sri Lanka Refugees Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Sri Lankan political crisis
By Navoj Jul 06, 2022 01:36 PM GMT
Report

இலங்கை அரசு செய்யும் தவறுகளை மறைப்பதற்கு விடுதலை புலிகள் மீது பலி சுமத்தி வதந்திகளை கிளப்புவதாக தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.

ஜுலை 05 மற்றும் 06ம் திகதிகளில் விடுதலை புலிகள் அமைப்பினால் குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று இலங்கை அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு வீணான வதந்திகளை பரப்புகின்றது: க.இன்பராசா | Sri Lankan Government Condemned Rumours

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜுலை 05 கரும்புலிகள் தினம் அத்தினத்திலும், 06ம் திகதியும் விடுதலை புலிகள் குண்டு தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக  வதந்தியை அரசாங்கம் பரப்பியுள்ளது.

வீண் வதந்தி

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்கள் மத்தியில் ஒரு பயத்தை உண்டாக்கும் நோக்கத்துடனேயே இலங்கை அரசாங்கம் கதையொன்றை கட்டவிழ்த்து உள்ளது.

விடுதலை புலிகளினால் குண்டு தாக்குதல் நடத்தப்படும் என்ற கருத்து முற்று முழுக்க பொய்யான கருத்து.

மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தினை ஏற்படுத்தி எமது மக்களை இன்னும் அதள பாதாளத்திற்கு கொண்டு செல்வதற்கு தமிழ் மக்கள் சார்பில் எவரும் இல்லையென்பதனை விடுதலை புலிகள் கட்சியினராகிய நாங்கள் தெரிவித்து கொள்கின்றோம்.

2009ம் ஆண்டு எமது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு முன்னாள் போராளிகளாகிய நாங்கள் ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்திருக்கின்றோம்.

இவ்வாறான நிலையில் விடுதலை புலிகள் மீள உருவாக போகின்றார்கள் என இலங்கை அரசு மாத்திரமல்லாது இந்திய அரசு கூட கடந்த சில மாதங்களின் முன்னர் கருத்து வெளியிட்டிருந்தது.

இதனை மறுத்தும் நாங்கள் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தோம். உண்மையிலேயே இலங்கை அரசும், இந்திய அரசும் விடுதலை புலிகளை வைத்து பந்தாடி கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை அரசு வீணான வதந்திகளை பரப்புகின்றது: க.இன்பராசா | Sri Lankan Government Condemned Rumours

விடுதலை புலிகள் இல்லாவிட்டால் அவர்களுக்கு எவ்வித அரசியற் செயற்பாடுகளையும் முன்நகர்த்த முடியாமல் இருக்கின்றார்கள்.

எனவே ஜீலை 05, 06ம் திகதிகளில் குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவலுக்காக நாங்கள் எங்கள் கண்டனத்தை தெரிவிப்பதோடு, இலங்கை மக்கள் அனைவருக்கும் எமது கட்சியின் சார்பில் வேண்டுகோளையும் முன்வைக்கின்றோம்.

எக்காலத்திலும் விடுதலை புலிகள் ஆயுத ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளமாட்டார்கள் என்றும் தெரிவித்து கொள்கின்றோம்.

விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி தற்போது அரசுக்கெதிராக போராடும் மக்களை அச்சப்பட வைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறானதொரு செய்தியை இலங்கை அரசாங்கம் மக்கள் மத்தியில் வெளியிட்டிருக்கின்றது.

இன்று வடக்கு, கிழக்கிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் பன்னிரண்டாயிரத்துக்கும் மேல் இருக்கின்றார்கள்.

அவர்கள் எமது மக்களின் விடுதலைக்காக ஆயுத போராட்டத்தினை முன்னெடுத்து இன்று அப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ளது.

தாயகத்தில் இன்று தங்கள் குடும்பங்களையும், தங்களையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்று பாடுபட்டு கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை அரசு வீணான வதந்திகளை பரப்புகின்றது: க.இன்பராசா | Sri Lankan Government Condemned Rumours

இந்நிலையில் வதந்திகளை வெளியிட்டு அவர்களை அச்சப்படுத்தி மீண்டும் மீண்டும் கட்டுக்கதைகளை கட்டிவிட்டு அவ்வாறானதொரு நிலைக்கு அவர்களை தள்ளிவிட வேண்டும்.

அவ்வாறு செய்தால் தங்களின் சுய அரசியல் ரீதியில் முன்னேற்றத்தை கொண்டு செல்லலாம், இதனை காட்டி வெளிநாடுகளில் இருந்து நிதியை பெற்றுகொள்ளலாம் என்ற திட்டத்தின் நோக்கமே இந்த அறிக்கையில் வெளிப்படுகின்றது.

இலங்கை அரசின் இந்த திட்டம் இனியொரு போதும் நடைபெறாது. இவ்வாறான பொய் வதந்திகளை கட்டிவிட்டே இலங்கை அரசு எமது மக்கள் மீது பாரியதொரு இன அழிப்பை மேற்கொண்டது.

இது மட்டுமல்லாது எமது தமிழ் மக்கள் மீது பொருளாதார தடையையும் விதித்திருந்தது. எமது தமிழ் மக்களுக்கு செய்த கொடுமையின் நிமித்தம் இன்று கடவுளின் வழியாக இலங்கையின் மீது ஒட்டுமொத்த நாடுகளும் சேர்ந்து பொருளாதார தடையை விதித்துள்ளது.

இலங்கை அரசு

கோட்டா, மஹிந்த அரசாங்கம் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் இன்று தங்களுக்கு இவ்வாறானதொரு நிலை வரும் என்று.

இலங்கை அரசு வீணான வதந்திகளை பரப்புகின்றது: க.இன்பராசா | Sri Lankan Government Condemned Rumours

எமது தமிழ் மக்களுக்கு செய்த பாவம் அவர்கள் தங்கள் வீடுகளில் கூட நிம்மதியாக இருக்க முடியாத அளவிற்கு அவர்கள் மக்களினாலேயே விரட்டியடிக்கப்படுகின்றார்கள்.

இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்கின்ற சிங்கள அரசு எமது தமிழ் மக்கள் மீது பல நெருக்கடிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது எமது நிலங்கள் அபகரிப்பு, திட்டமிட்ட மீள் குடியேற்றம் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது.

தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை இந்த அரசாங்கங்கள் விளங்கி கொள்ள வேண்டும்.

கோட்டபாய வீட்டுக்கு சென்றாலும் இனிவரும் ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் மூவின மக்களும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டால் மாத்திரமே இந்த நாட்டை கட்டியெழுப்பலாம்.

விடுதலை புலிகளை சொல்லி சொல்லி அரசியல் நாடகம் நடத்துவது இலங்கை அரசாங்கத்திற்கு புதியதல்ல.

எமது தமிழ் மக்களின் ஒவ்வொரு நினைவேந்தல்களின் போதும் இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்தி தமிழ் மக்களை வீட்டிலேயே முடக்க பார்க்கின்றனர்.

இலங்கை அரசு ஏதேனும் செய்து விட்டு விடுதலை புலிகள் மீது பழிகளை சுமத்துவதற்காகவும் இவ்வாறான செய்தியை வெளியிட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்க தோணுகின்றது”என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US