சீனாவை கைவிட்டு இந்தியாவிடம் தாவிய இலங்கை அரசு - செய்திகளின் தொகுப்பு
உயர்தர நைட்ரஜன் திரவ உரங்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
நெல் அதிகளவில் பயிரிடப்படும் அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதலில் இந்த நைட்ரஜன் திரவ உரங்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்திற்குத் தேவையான மூன்று வகையான உரம், கரிம திரவ உரம் மற்றும் பொட்டாசியம் குளோரைட் ஆகியவை ஏற்கனவே அம்பாறை விவசாய மேம்பாட்டு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய தமிழ்வின் செய்திகளின் தொகுப்பு,
