மும்பை விமான நிலையத்தில் இலங்கையர் கைது
4.18 கோடி இந்திய ரூபா மதிப்பிலான தங்கத்தை கடத்தியமை தொடர்பில் இலங்கை நாட்டவரும், தமிழகத்தைச் சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை விமான நிலையத்தில் வைத்து நேற்று(29.08.2023) இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட தங்கம்
எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் தப்பிவிட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமானத்துக்காக நின்று கொண்டிருந்தபோது சர்வதேச விமானம் ஒன்றுக்காக நின்ற ஒருவர் கறுப்பு நிற பை ஒன்றை உள்நாட்டு விமானப் பயணி ஒருவரை நோக்கி எறிந்த நிலையில், சந்தேகப்பட்ட அதிகாரிகள் அதனை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த கறுப்பு பையில் இருந்து மெழுகு வடிவில் இருந்த எட்டு கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலதிக விசாரணைக்காக இருவரும் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |