32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் அங்கொட லொக்காவின் சகாக்கள் கைது
இலங்கையை சோ்ந்த பாதாள உலகக்குழுவின் ஹெரோயின் கடத்தல்காரரான அங்கொட லொக்காவின் நெருங்கிய சகா 'ஜில்' என்பவருக்கு சொந்தமான 32 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 12 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
முல்லேரிய பரோன் திலகரட்ன மாவத்தையில் வைத்து இன்று ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக விசேட அதிரடிப்படை மேலும் தெரிவித்துள்ளது.
அங்கொட லொக்காவின் நெருங்கிய சகா பொன்னம்பெரும ஆராச்சி 'ஜிலே' என்ற தனுஷ்க புத்திக இந்தியாவிற்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.