விமானப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் இலங்கை உணவுகள் (Photos)
ஸ்ரீலங்கன் விமானப் பயணிகளுக்கு இலங்கைக்கே உரிய உணவுகளை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. போஷாக்குமிக்க தேசிய உணவை, விமானப் பயணிகளுக்கு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் செரன்டிப் மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையின் இந்த தேசிய உணவை படிப்படியாக தமது விமானப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்த எண்ணியுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இலங்கை தொடர்பான தமது முதல் அனுபவத்தை விமானத்திலேயே பெற்றுக்கொள்கின்றனர்.
இதனால்,இவ்வாறான திட்டத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri