மாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழில் படகுகள்
இலங்கையின் கடற்றொழில் படகுகள் இரண்டு மாலைத்தீவின் தேசிய பாதுகாப்புப் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலைத்தீவின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறப்படும் நிலையில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மாலைத்தீவின் கடற்டைக்கு ஜனவரி 25 ஆம் திகதியன்று கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த இரண்டு கடற்றொழில் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த ஒரு படகில் ஏழு பணியாளர்களும் மற்றைய படகில் ஆறு பணியாளர்களும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்கள்
எனினும், இந்த இரண்டு படகுகளும் தற்போது மாலைத்தீவு தேசிய பாதுகாப்பு கடற்படை கப்பலான நூராதீனின் தடுப்பில் ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், குறித்த மீன்பிடி படகுகள் இரண்டும் மாலே நகருக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் மாலைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |