சீஷெல்ஸில் தொடரும் இலங்கை கடற்றொழிலாளர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம்
சீஷெல்ஸில் ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் கடற்றொழிலாளர்கள், 9ஆவது நாளாகவும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்மை உடனடியாக சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கோரி மார்ச் 1ஆம் திகதி அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்ததோடு, லொரென்சோ புத்தா 4 என்ற பல நாள் கடற்றொழில் இழுவை படகில் பயணித்த 6 பேரும் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுதம் தாங்கிய குழு
லொரென்சோ புத்தா 4 என்ற விசைப்படகு ஜனவரி 12 ஆம் திகதி திக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணமாக புறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதில் பயணித்த 6 பேரும் சிலாபம் மாரவில பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் பிடிக்கப்பட்டு பின்னர் சீஷெல்ஸ் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே அவர்கள் தற்போது சீஷெல்ஸ் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |