இலங்கை திரைப்படத்துறையில் புரட்சி - படையெடுக்கவுள்ள இந்திய நடிகர், நடிகைகள்
இலங்கையின் சுற்றுலாத் தொழில் துறையை மேம்படுத்துவதற்காக புதிய சுற்றுலா அமைப்பை ஏற்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கையை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
இலங்கை திரைப்படத் துறையை சர்வதேச திரைப்பட தரத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டிற்கு ஆகக்கூடுதலான சுற்றுலாப் பயணிகளை அழைப்பதற்காக நாட்டின் சுற்றுலாத் துறையில் கவரக்கூடிய இடங்கள் மற்றும் திரைப்பட தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிகழ்ச்சி நிரல்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்தியாவின் பிரபல திரைப்படக் கலைஞர்கள் தற்போது இலங்கையில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த நடிகர், நடிகைகள் இலங்கைக்கு வருகை தருவதாக முன்னணி திரைப்பட பணிப்பாளர் நாகதீபாலி சந்திரசேகர் கருத்துத் தெரிவிக்கையில் கன்னட திரைப்படத் துறையில் முக்கிய நடிகர்களை பயன்படுத்தக்கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளர்.