பிரித்தானியாவில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை திரும்பும் தம்பதி
பிரித்தானியாவில் 26 வருடங்களாக வாழும் இலங்கை குடும்பம் ஒன்று கடுமையான அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் தாயகம் திரும்ப தயாராகி வருகின்றனர்.
சவுதாம்ப்டன் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் 62 வயதான ஆனந்த ரத்நாயக்க மற்றும் அவரது மனைவிக்கே உயிர் அச்றுத்தல் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் முன்னெடுத்து செல்லும் கடைக்குள் வரும் கும்பல் ஒன்று அவர்களை அச்சுறுத்துவதாக பாதிக்கப்பட்ட இலங்கை குடும்பம் தெரிவித்துள்ளது.
பொலிஸாரிடம் முறைப்பாடு
கடந்த பல மாதங்களாக அடிக்கடி கடைக்குள் நுழைந்து பொருட்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்வதாகவும், அதனை தடுக்க முற்படும் போதும் கொலை அச்சுறுத்தல் விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பலமுறை சிசிடிவி ஆதாரங்களுடன் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்தும் எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆனந்த குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு சென்று தமது இறுதிக்காலத்தை மகிழ்ச்சியாக கழிக்க திட்டமிட்டுள்ளதாக குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.