நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாத காலப்பகுதிக்குள் தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித திருத்தங்களுமின்றி தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முக்கிய செலவுக்காரணிகள்
15-07-2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நீர் கட்டண சூத்திரத்தின்படி, முக்கிய செலவுக் காரணிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, நீர் விற்பனையின் அலகு விலை அரையாண்டுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.

2025 ஆம் ஆண்டுக்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி அறிக்கைக்கமைய மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின்படி, தற்போதைய நீர் கட்டணத்தின் மூலம் முழுமையான செயல்பாட்டுச் செலவுகளை ஈடுசெய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பணிப்பாளர் குழு, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு தண்ணீர் கட்டணங்களை உயர்த்தாமல் தொடர முடிவு செய்துள்ளது.
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri