ஜோர்தானில் சம்பளமின்றி தவிக்கும் இலங்கை ஊழியர்கள்
ஜோர்தானில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை மற்றும் அவர்களது குடியிருப்பு மற்றும் வேலை அனுமதிகள் புதுப்பிக்கப்படவில்லை என அம்மானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ஜோர்டானிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் தூதரகத்தின் ஒருங்கிணைந்த முயற்சியால், இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளைச் சேர்ந்த 296 தொழிலாளர்களில், 41 தொழிலாளர்கள் சம்பள நிலுவைத் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்புக் கோரிக்கைகளைப் பெற்ற பின்னர், இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சம்பள நிலுவைகள்
அத்துடன் இரண்டு தொழிற்சாலைகளில் பணிபுரியும் 30 தொழிலாளர்களை, ஜோர்டானில் உள்ள மற்ற ஆடைத் தொழிற்சாலைகளில் அவர்களது ஒப்புதலுடன் மீண்டும் பணியமர்த்தவும் தூதரகம் இணங்கியுள்ளது.
மேலும், எஞ்சியுள்ள தொழிலாளர்களை அவர்களது சம்பள நிலுவைகள் மற்றும் பிற உரிமைகளை பெற்றுக்கொடுத்து விரைவாக நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஜோர்டானிய அதிகாரிகள், தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
