பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக மாறாது: ஷேக் ஹசீனா
தமது நாடு ஒருபோதும் இலங்கையாக மாறாது என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 47வது தியாக நினைவு தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலை

மேலும் தெரிவிக்கையில்,“பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக மாறாது. அத்துடன் ஒருபோதும் இலங்கை போன்ற பொருளாதார சூழ்நிலையில் மூழ்காது.
அதற்கு பதிலாக நமது நாடு அனைத்து உலகளாவிய சவால்களையும் கடந்து தொடர்ந்து முன்னேறும்.
ஏற்கனவே எதிர்கட்சியின் ஆட்சியில் பங்களாதேஷ் இலங்கை போன்ற சூழ்நிலையை
எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
எனினும் எமது கட்சி அந்த நிலைமையை மாற்றியுள்ளது.”என கூறியுள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 18 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan