அவுஸ்திரேலியாவில் இலங்கை வைத்தியருக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனை
அவுஸ்திரேலியா - மெல்பேர்னில் உள்ள தோல் நிபுணரான வைத்தியர் பிரதீப் திஸாநாயக்கவுக்கு சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 52 வயதான பிரதீப் திசாநாயக்கவுக்கு 10 வருடங்களும் 10 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்து மீண்டும் அவுஸ்திரேலியா திரும்பிய நிலையில் மதங்களை அடிப்படையாகக் கொண்டு பிரசங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இலங்கை மருத்துவர்
அவரை சுற்றி ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டதாக கூறப்படுகிறது. பிரதீப் திசாநாயக்க ஐந்து தடவைகள் ஒரு சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்தியதாகவும், 16 வயதுக்குட்பட்ட மற்றொரு சிறுமியை இரண்டு முறை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரதீப் திஸாநாயக்க அனைத்து குற்றங்களையும் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கை மருத்துவர் குற்றத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஆனால் மதத்தின் அடிப்படையில் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் நியாயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.